என்னைப் பற்றி!


அன்புடையீர் வணக்கம்,

திருமிகு சண்முகபிரதீபா என்கின்ற பிரதீபா பிரேம் ஆகிய நான்  சோழ வள நாடான தஞ்சைத் தரணியில் பிறந்தேன். 

தஞ்சை சாஸ்த்ரா கல்லூரியில் முதுகலை கணினிப் படிப்பை முடித்திருந்தாலும் தமிழ் மொழிமேல் கொண்ட தீராத அன்பால் தமிழ் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். 

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய தலைவர்,  அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராகவும் கடந்த 15 ஆண்டுகளாக தன்னார்வலராகவும் இருந்து வருகிறேன், பேரவையில் கடந்த 2020 முதல் 2024 வரை இலக்கியக் குழு தன்னார்வலராகவும், தாய்த்தமிழ் பள்ளிகள் குழு, தொன்மை தொடக்கம் தொடர்ச்சிக் குழு, பேரவை மலர்க் குழு, வணக்கம் வட அமெரிக்கா, பேரவை அருவி ஆசிரியர் குழு, பல்கலைக்கழகக் குழு, தற்கால மொழி பெயர்ப்புக் குழு,  பேரவை கவியரங்க ஒருங்கிணைப்பு

"The Trove" என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிற்கான பணி, செய்தி மடல்கள் தயாரிப்புப் பணி ஆகியவற்றில் இணைந்து முழு ஈடுபட்டுடன் பணி செய்து வந்தேன்.

பேரவை இலக்கியக் குழுத் துணைத்தலைவராக 2022 முதல் 2024 வரை இருந்த நிலையில் மாதம் தோறும் இலக்கியக் கூட்டங்களை நடத்தியதோடு பேரவைத் திருவிழாவை இணையவழியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தி அதில் தமிழிசை, கவியரங்கம், என பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை தமிழ் நாட்டில் இருந்து ஆளுமைகளை அழைத்து நடத்தினோம்,  அட்லாண்டா, நியூயார்க், சாக்ரமாண்டோ, சான்ஆண்டானியோ பேரவை  விழாக்களில் இலக்கிய ஆளுமைகளை அழைத்து வந்து  மிகப்பெரிய இலக்கிய இணையமர்வை நடத்தினோம்.

தமிழ்த்தாயின் கைபிடித்து தமிழ்த் தன்னார்வலராக, கவிஞராக, எழுத்தாளராக, பேச்சாளராக தமிழ் சார்ந்த பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறேன். 

 தமிழால் கிடைத்த பேறு 

1.மனிதம் விதைப்போம் அமைப்பின் மங்கையரில் மாணிக்கம் விருது- 2024

2.வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின்(FeTNA )அமெரிக்காவின் ஆற்றல் மிகு பெண்கள் விருது -2023

3. தமிழன்பன் 80 விருது-2022

4. ஐயை சக்தி விருது-2022

5. தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி வழங்கிய முத்தமிழ் திலகம் விருது-2022! இதுவரை எழுதியுள்ள நூல்கள் 8, தமிழ்நாடு அரசால் 2024 ஆம் ஆண்டில் வட அமெரிக்கச் சிறப்பு விருந்தினராக கவியரங்கத்தில் கலந்து கொண்டேன். 

6.பேரவை(FeTNA) வட அமெரிக்காவின் ஆற்றல் மிகு பெண்கள் விருதினை 2023 ஆம் ஆண்டு எனக்கு அளித்தது என்பதை பணிவன்புடன் கூறிக்கொள்கிறேன்.

“ஒரு மொழி அழிந்தால் அந்த இனம் அழியும்” என்று தமிழ் மொழியையே என் உயிராக எண்ணி தலைமுறை தாண்டியும் தமிழ் வளர என்னாலான பணிகளைச் செய்து வருகிறேன் 

 எழுதியுள்ள நூல்கள்

1.    "ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி"-  2019 

 2. "கற்பனைச் சிறகினிலே" - 2020 

3.    "என் நெடும்பயணக் காட்டினிலே" - 2022

4.  "என் நினைவுக் குடுவையிலிருந்து"- 2022 

மேலும் அடுத்தத் தலைமுறை இளம் தமிழ் பிள்ளைகளுக்காக  

                                                                                                       "அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

                                                                                                         மறத்தலின் ஊங்கில்லை கேடு"

    "தமிழோடு நாம் நடக்கும் தடமெல்லாம் தமிழர் மரபும், பண்பாடும் கிளைக்கட்டும்!" 


நன்றி!

சண்முகபிரதீபா (எ )பிரதீபா பிரேம் ( மருதயாழினி)