இயக்குநராக எதிர்கால பணிகள் மற்றும் இலக்கு!
2026 -2028 ஆம் ஆண்டின் அணியின் நோக்கங்களை நிறைவேற்ற உறுப்பினர்களுடன் உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் நெருக்கமாக பணியாற்றி ஒற்றுமையை நிலவச் செய்வேன்
தலைமுறைத் தாண்டிய தமிழை வளர்க்க நமது இளம் படைப்பாளர்களுக்கு அவர்களுடைய, எண்ண ஓட்டத்திற்கு தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களின் எழுத்து, படைப்பு மற்றும் பேச்சாற்றலை வளர்ப்பது மற்றும் அவர்களை பேரவை வழியாக உலக அளவிளான நிகழ்வுகளில் பங்குபெறச் செய்வது.
நமது தமிழ் கல்வெட்டுகள் , பழங்கால வரலாறு, மொழியின் தொன்மை, மரபு மற்றும் பண்பாடு சார்ந்த தமிழ்நாட்டின் அனைத்துச் செல்வங்களை பற்றியும் அற நூல்கள் கூறும் அறக்கருத்துகளை பற்றியும் இங்கே வளரும் அடுத்தத் தலைமுறை பிள்ளைகளுக்கு கற்றுத் தர தளத்தை அமைக்க வேண்டும்.
இன்றைய சூழலில் நமது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தேவையான மன நலம் மற்றும் உடல் நலம் பேணும் நிகழ்வுகளை நடத்த துணை நிற்பேன்.
மொழி, இலக்கியம், வரலாறு,தமிழிசை, இயற்கை, தமிழ் மருத்துவம், தொண்டு, மற்றும் தமிழரின் கலைகளை, பண்பாட்டைக் காக்க குழுவுடன் இணைந்து திட்டங்களை உருவாக்குவேன்.
தொன்மையும் பழமையும் கொண்ட தமிழ் மொழியை உலக அரங்கில் நிறுவ ஒத்துழைப்பேன்.
நலிந்த எழுத்தாளர்களையும் , படைப்பாளர்களையும் பேரவைக்கு அழைத்து வந்து அனைவருக்கும் சரியான மதிப்பூதியம் கிடைக்கச் செய்வேன்
உலகெங்கும் வறுமையின் பிடியில் இருக்கும் பிள்ளைகளுக்குக் கல்வி, மற்றும் அடிப்படை தேவைகளை வழங்க திட்டங்களை நிறைவேற்றுவேன்
இயற்கை வளங்களைப் பாதுகாக்க உதவுவேன், அதற்கான ஒரு குழுவை அமைத்து செயல்படுவேன்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் இருந்து அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்
உங்கள் அனைவருடனும் ஒன்றிணைந்து பேரவையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என்று உறுதி பூணுகிறேன்.